8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் முருகன் அந்த பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பக்கத்திலுள்ள பள்ளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பார்த்து சத்தம் போட்டதும் முருகன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.