கட்டிட தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்குளம் பகுதியில் கட்டிட தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் மேலப்பாளையம் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது சாலயோரம் முருகன் திடீரென மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் முருகனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் முருகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மேலப்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.