தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி நகர் பகுதியில் ரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ரமணி வேலை முடிந்து வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் ரமணி திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த ரமணி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமணியின் உடலை உடனடியாக கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த நல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.