Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் தொல்லை அதிகரித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் பகுதியில் மைக்கேல் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவருக்கு கடன் சுமை அதிகரித்ததால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இவருக்கு டெய்லரான மெர்சி ராணி என்ற மனைவி உள்ளார். இவர் சோழமாதேவி பகுதிக்கு வேலை தேடி சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. அதன்பின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது மைக்கேல் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மெர்சி ராணி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று மைக்கேல் ராஜை உடனடியாக மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு மைக்கேல் ராஜை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த மடத்துக்குளம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |