தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முறப்பநாடு பகுதியில் சேதுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிபாண்டி என்ற மகன் உள்ளார். இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரரான செல்வம் என்பவரின் மனைவி மாரியம்மாள் ஆகியோருக்கும் இடையே வீட்டு கழிவு நீர் செல்வது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது இசக்கி பாண்டி மாரியம்மாளை தாக்கிவிட்டு சென்னல்பட்டி பேருந்து நிலையத்திற்கு சென்று விட்டார்.
இதனையறிந்த மாரியம்மாள் கணவரான செல்வம் சென்னல்பட்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இசக்கிபாண்டியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கிபாண்டி செல்வத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து செல்வம் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இசக்கி பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.