தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் தனியார் கல்லூரி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ரஷித்அகமத் மற்றும் சதீஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன்பின் இவர்கள் 2 பேரும் பைபாஸ் சாலையில் இருக்கும் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.