ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கூலித்தொழிலாளி 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முளங்கூட்டுவிளை பகுதியில் கூலி தொழிலாளியான டேவிட்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் டேவிட்சன் அருவிக்கரை தடுப்பணை பகுதியில் பரளியாற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டேவிட்சன் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டுள்ளார். இதனை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் டேவிட்சனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 நாட்களுக்கு பிறகு ஆற்றங்கரையோரம் ஒதுங்கிய டேவிட்சனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.