தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ரத்தினம் புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.