கிராமங்களில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு கலெக்டரின் உத்தரவின் பேரில் நேரில் சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது, இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்குக் தடுப்பூசி போட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின் படி மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் வருவாய் ஆய்வாளர் தேவேந்திரன் ஆகியோர் தலைமையில் நரசிங்கபுரம் உள்பட 2 கிராமங்களில் தொழிலாளர்களை தேடி சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பணிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி பானுமதி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.