தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடீஸ்வரன் நகர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய காரை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குமாரின் தொழில் சரிவர நடைபெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைப் பார்த்த உறவினர்கள் இது குறித்து பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குமாரின் உடலை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.