வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக பதிவு செய்ய வேண்டுமென உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் 18 வகையான தொழிலாளர்கள் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பல வகையான கட்டுமானம், அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டிருக்கும் 18 வயது முதல் 60 வயது வரையிலான தொழிலாளர்களுக்கு பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீட்டு வேலை செய்யும் செயலாளர்கள் வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் https://tnuwwb.tn.in என்ற இணையதளம் மூலமாக உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும்.
இதில் உறுப்பினராக பதிவு செய்தவர்கள் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பின் தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தவர்களுக்கு திருமணம், மகப்பேறு, 2 குழந்தைகளுக்கு கல்வி உதவி, கண் கண்ணாடி மற்றும் நியாயமான தகவலுக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உதவித்தொகை, 60 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு ஓய்வூதியம் என பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இதில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போனில் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், வயதுக்கான சான்று மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.