Categories
மாநில செய்திகள்

தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி விடுமுறை ரத்து…. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் வரும் ஆண்டு 2022 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த  பட்டியலில் தொழிலாளர்கள் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய இரண்டு அரசு விடுமுறைகளை சேர்க்கப்படவில்லை. இதனால் அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்  அரசு சார்பு செயலர் கிரண் வெளியிட்டுள்ள செய்தியில், தொழிலாளர்கள் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி  ஆகிய இரு தினங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அரசு விடுமுறை  இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து துணைநிலை ஆளுநரை உத்தரவின் பெயரிலேயே இந்த பட்டியல் தயாரித்து  வெளியிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு விடுமுறைகள் ஞாயிறு  கிழமையில் வந்தால் அதனை ரத்து செய்வது வழக்கமானது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |