தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இவ்விபத்தில் படுகாயமடைந்த 25-ற்கும் அதிகமான பெண் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும், தொழிலாளர்களுக்கு நிர்வாகம் பாதுகாப்பான போக்குவரத்து வசதி செய்து தரக்கோரி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக மாநில செயலாளர் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
அதன்பின் மாவட்ட செயலாளர் நாகப்பன் வரவேற்று பேசியுள்ளார். இதனையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றியுள்ளார். மேலும் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் பெண்கள் உள்பட 50-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி உள்ளனர்.