Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அடுத்துள்ளபூலாங்கிணர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற்று 20 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செந்திலை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் செந்தில் தனது தாயாரிடம் செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வெளியே சென்ற செந்தில் 3 நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் செந்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்திலின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |