தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமுதுண்ணாக்குடி பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஆனால் நாகராஜன் முருகம்மாள் மீது சந்தேகமடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாகராஜன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சாத்தான்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நாகராஜனின் கழுத்தில் நக கீறல்கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் மகாராஜன் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.