தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சுரேஷ் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் சுரேசை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தச்சநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.