தொழிலாளி தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம் பகுதியில் சிவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சிவானந்தத்தின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு சிவானந்தம் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் சிவானந்தம் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென சிவானந்தம் தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்ததும் அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிவானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.