8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியிணைக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி ஒருவர் தனது வீட்டில் ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த பாண்டியன் நைசாக வீட்டிற்குள் நுழைந்து அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அலறியடித்து மாணவி வீட்டுக்கு வெளியே சென்றுள்ளார். அதன்பின் வேலைக்கு சென்று வீடு திரும்பிய தனது பெற்றோரிடம் இதுகுறித்து மாணவி கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.