சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நமசிவாயபுரம் கிராமத்தில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் எப்போதும்வென்றான் பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.