வயிற்றுவலியால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியதும்மகுண்டு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான நாராயணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணசாமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாத நாராயணசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாராயணசாமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.