Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சேர்ந்து வாழ மறுத்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணசாமி தனது மனைவியை கடந்த ஆண்டு பிரிந்து தனது தந்தையோடு தென்காசி மாவட்டத்தில் உள்ள கரிசல்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இதனையடுத்து கழுகுமலை வந்து மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு ராமலெட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணசாமி தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணசாமியை மீட்டு கோவில்பட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிருஷ்ணசாமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |