தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கொடிகுளம் பகுதியில் சுடலையாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுடலையாண்டிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுடலையாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுடலையாண்டி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த சுடலையாண்டி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைபார்த்த அருகிலுள்ளவர்கள் சிவந்தி பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுடலையாண்டியின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.