Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காலையிலேயே இப்படி பண்றீங்களே” தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் தனுஷ்கோடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிராஜா என்று மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பேச்சிராஜாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி பேச்சிராஜா மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனை குடும்பத்தினர் கண்டித்த போதும் பேச்சிராஜா மது குடிப்பதை நிறுத்தவில்லை. இந்நிலையில் பேச்சிராஜா வழக்கம்போல் காலையில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்து வேதனையடைந்த பத்மாவதி ‘காலையிலேயே மது குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறீர்களே, அக்கம்பக்கத்தினர் பார்த்தால் என்ன நினைப்பார்கள்’ என்று கூறி கண்டித்துள்ளார்.

இதனையடுத்து இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து பத்மாவதியும், அவரது 2 மகன்களும் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த பேச்சிராஜா மேற்கூரையில் உள்ள பனங்கட்டையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த பத்மாவதி பேச்சிராஜா தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் பேச்சிராஜாவை கீழே இறக்கிய போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சிராஜாவின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |