Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வெளியே சென்று வருவதாக கூறி சென்ற தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாமலைநகர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பசாமிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. அதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்நிலையில் கருப்பசாமி எட்டயபுரத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

அதன் பின் நீண்ட நேரமாகியும் கந்தசாமி வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடிவந்தனர். இந்நிலையில் பெருநாழி விலக்கு பேருந்து நிலையம் பின்புறம் உள்ள புளிய மரத்தில் கருப்பசாமி தூக்கில் பிணமாக தொங்குவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விளாத்திக்குளம் காவல்துறையினர் கருப்பசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |