தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பகண்டை கூட்ரோடு பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் கடந்த ஒன்றரை வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இரண்டாவதாக ராமச்சந்திரன் ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர்.
ஆனால் ராமச்சந்திரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. அந்நேரம் அவரது மைத்துனர் சின்னதுரை அங்கு வந்த போது ராமச்சந்திரனின் வீட்டின் அறையில் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ராமச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமச்சந்திரனின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.