தொழிலாளி வீட்டில் நகை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வெட்டும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் முடி திருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வெட்டும் பெருமாள் தனது குடும்பத்தினருடன் லட்சுமி நகரில் உள்ள தசரா பிறையில் சாமி கும்பிட சென்றிருந்தார். இதனையடுத்து வெட்டும் பெருமாள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன்பின் வெட்டும் பெருமாள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 1\2 பவுன் தங்க சங்கிலி மற்றும் ஒரு ஜோடி கம்மலை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வெட்டும் பெருமாள் இதுகுறித்து திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.