கடன் பிரச்சினையால் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பெயர் தக்கா கிராமத்தில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வீடு கட்டுவதற்காக பல இடங்களில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் ரத்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ரத்தினத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரத்னம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.