தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை கல்நார்சம்பட்டி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது போதையில் வீட்டில் வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது.
அப்போது போதையில் சரவணன் வீட்டிற்கு வந்த நிலையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து தனது மனைவியை பயமுறுத்துவதற்காக வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனால் சரவணன் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக சரவணனின் மனைவி நாகலட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.