Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாலமோன் ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சாலமோன் ராஜா கடன் பிரச்சினையால் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சாலமோன் ராஜா கடந்த 27-ஆம் தேதி வீட்டில் இருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனையறிந்த சாலமோன் ராஜாவின் குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சாலமோன் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சாயர்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |