மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆவராணி பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 மகன் 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அமிர்தவள்ளி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனால் மனமுடைந்த குமாரசாமி திடீரென வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் குமாரசாமியை உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குமாரசாமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கீழ்வேளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.