Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. உடல் நசுங்கி பலியான தொழிலதிபர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் ரப்பர் விற்பனை செய்யும் தொழிலதிபரான சசிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வியாபாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சசிகுமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சசிகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |