Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தொழிலாளிகளை கடத்திய வழக்கு” வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

தொழிலாளிகளை கடத்திய வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜெல்மாரம்பட்டியல் பெரியசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் பென்னாகரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் பெரியசாமி கூறியிருப்பதாவது “தனது மகன் முத்துவேல் மற்றும் அதே ஊரை சேர்ந்த சுரேஷ் ஆகிய 2 பேரையும் தாளப்பள்ளத்தை சேர்ந்த டி.ஆர். அன்பழகன் என்பவர் தாக்கி கடத்தி சென்றுவிட்டார். அவர்கள் 2 பேரையும் அன்பழகன் ரங்காபுரத்தில் இயங்கும் கல்குவாரியில் அடைத்து வைத்திருப்பதாக” அவர் தெரிவித்திருந்தார். இந்த தாக்குதல் கல்குவாரியில் டீசல் திருட்டு குறித்து நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் அன்பழகனுக்கு சொந்தமான கல்குவாரிக்கு சென்றனர்.

அப்போது அங்கு இருந்த சுரேஷ், முத்துவேல் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து  பெரியசாமி கொடுத்த புகாரின்படி 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டி.ஆர்.அன்பழகன் மற்றும் கடத்தலுக்கு உதவிய தாளப்பள்ளத்தை சேர்ந்த முருகன், கொட்லுமாம்பட்டியை சேர்ந்த மகேந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களில் கைது செய்யப்பட்ட டி.ஆர். அன்பழகன் தற்போது ஆவின் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் அ.தி.மு.க. விவசாய பிரிவு மாநில தலைவராகவும் இருக்கிறார். இதனிடையில் கைது செய்யப்பட்ட அன்பழகன் நெஞ்சுவலியினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Categories

Tech |