தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூலையாபுரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சாத்தான்குளம் முதலூர் பகுதியில் வசிக்கும் லிவிங்ஸ்டன் சாமுவேல், ஆண்டன் வின்ஸ்டன் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
மேலும் அவர்கள் அந்த பகுதியில் வந்த ஒரு தொழிலாளியை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் வெட்டியதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தட்டார்மடம் காவல்துறையினர் 2 வாலிபர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் தட்டார்மடம், நாசரேத், சாத்தான்குளம் ஆகிய காவல்நிலையங்களில் லிவிங்ஸ்டன் சாமுவேல் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.