தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தென்பாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரையண்ட் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரிடம் 2 பேர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் அமுதாநகர் பகுதியில் வசிக்கும் ரஞ்சித்குமார் மற்றும் பேச்சிமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.