தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் காட்டுத்தோட்டம் என்னும் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இறந்து கிடந்தவர் ராக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பதும், இவர் கூலி வேலை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
மேலும் மர்மநபர்கள் செல்வராஜியின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து செல்வராஜின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வராஜின் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.