ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விராலிகாட்டுவிளையில் விஜில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு விஜில் ரயிலில் சென்று கொண்டிருந்தார. இதனையடுத்து ரயில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது ரயிலில் இருந்து கீழே இறங்கிய விஜில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அதன்பின் அவர் வந்த ரயில் புறப்பட்டது கவனிக்காமல் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த விஜில் சுதாரித்துக்கொண்டு ஏறுவதற்கு முயற்சி செய்தார்.
ஆனால் விஜில் ரயிலில் ஏற முடியாமல் விரக்தியில் கொடைரோடு ரயில் நிலைய தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் கொழிஞ்சிப்பட்டி என்ற பகுதியில் விஜில் வந்து கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மற்றொரு ரயில் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட விஜில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜிலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.