தொழிலாளியை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோணுகால் கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம் என்ற மகன் உள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் தனது நண்பர் பாண்டி என்பவருடன் கோவில்பட்டி மெயின் சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சாஸ்திரி நகர் பகுதியில் வசிக்கும் சின்ன ஜமீன் என்பவர் 2 பேரையும் சாலையோரமாக நிற்க சொல்லி அவதூறாக பேசியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சின்ன ஜமீன் ஆறுமுகத்தை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். மேலும் சின்ன ஜமீன் ஆறுமுகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆறுமுகம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சின்ன ஜமீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.