Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. தொழிலாளிக்கு கொலை மிரட்டல்…. பிரபல ரவுடி கைது….!!

தொழிலாளியை மிரட்டிய ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரையண்ட் நகர் பகுதியில் திருவடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துப்பாண்டி என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவரது செல்போன் காணாமல் போனது. இந்த செல்போனை குருவிமேடு பகுதியில் வசிக்கும் குருவி முருகன் என்பவர் செல்போனை எடுத்ததாக முத்துப்பாண்டியிடம் கூறியுள்ளார். இந்நிலையில் முத்துப்பாண்டியன் தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது குடிபோதையில் வந்த குருவிமுருகன் முத்துப்பாண்டியனிடம் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துப்பாண்டியன் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குருவிமுருகனை கைது செய்துள்ளனர். மேலும் குருவிமுருகன் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்பட 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |