Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்…. தொழிலாளி அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருவேலங்குன்று பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஜெகன் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த சீவலப்பேரி பகுதியில் வசிக்கும் பூல் பாண்டியன் என்பவர் ஜெகனிடம் கத்தியை காட்டி மிரட்டி மது அருந்த ரூ.500 கேட்டுள்ளார். இதுகுறித்து ஜெகன் நெல்லை சந்திப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரிய பிரான்சிஸ் சேவியர் பூல் பாண்டியை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |