Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த தொழிலாளி…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிபாண்டி என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இசக்கிபாண்டி வேலை முடித்துவிட்டு பழவூர் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடக்கு சங்கன்திரடு பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பவர் இசக்கிபாண்டியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார்.

அதற்கு இசக்கிபாண்டி பணம் தர மறுத்ததால் தினேஷ் அவரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இசக்கிபாண்டி சுத்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தினேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |