தொழிலாளியை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடபாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி 1-வது ரயில்வே கேட் அருகே தொழிலாளி ஒருவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த தாளமுத்துநகர் பகுதியில் வசிக்கும் ராஜாமணி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜாமணி மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.