Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மருத்துவ செலவுக்கு பணமில்லை…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாது கொட்டாய் பகுதியில் கூலித் தொழிலாளி சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், 2 மகன்கள்,, ஒரு மகள் இருக்கின்றனர். இதில் சங்கர் குடும்பம் நடத்துவதற்கு போதிய வருமானம் இன்றி சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் சங்கருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ செலவுக்கு பணமின்றி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சங்கர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் சங்கரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து ஏரியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |