சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக சி.ஐ.டி.யூ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தருமபுரி மண்டல பொதுச்செயலாளர் முரளி தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு ஒருங்கிணைப்பாளர் கேசவன் தொடங்கி வைத்து பேசியுள்ளார்.
அதன்பின் இம்மாவட்டத்தில் போக்குவரத்து பணிமனை சி.ஐ.டி.யு கிளை தலைவர் சுதாகர் மற்றும் செயலாளர் முகுந்தன் ஆகியோர் பணிமனை முன்பாக பெயர் பலகையை திறந்து வைத்து வாயிற் கூட்டம் நடந்தது. இதனை அடுத்து இதற்காக இருவர் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையாக நீண்ட நேரம் அலைக்கழித்து பணி வழங்காமல் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கோஷம் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.