செங்கல் சூளை பூட்டி சீல் வைத்து அபராதம் விதித்ததை கைவிட கோரி தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 150-க்கும் அதிகமானவர்கள் திரண்டு வந்துள்ளனர். அன்பின் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயற்சி செய்த போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதில் முக்கிய நிர்வாகிகளை மட்டும் கலெக்டரை சந்திக்க காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
அப்போது கலெக்டரிடம் அளித்த மனுவில் அண்ணாகிராமம் ஒன்றியத்தில் நாட்டு செங்கல் சூளை தயாரித்த நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இதனை அடுத்து கடந்த 2011-ஆம் ஆண்டு தானே புயல் ஏற்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டதற்கு இணங்க நாங்கள் தான் செங்கல் தயாரித்து வழங்கி இருக்கிறோம். ஆனால் செங்கல் சூளை தயாரிக்க சட்டப்படியான உரிமம் பெற சுரங்கம் உதவி இயக்குனரிடம் விண்ணப்பித்து இருந்திருக்கிறோம். அதற்கு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இருப்பினும் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் செங்கல் சூளையை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதை தற்போது மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். இதனை தொடர்ந்து அதிகமான தொகை அபராதமாக விதித்து இருப்பதால் செங்கல் சூளை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வேலை இன்றி தவித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாகிகள் கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர்.