தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு நடுப்பாளையம் பகுதியில் கார்த்திபன் என்பவர் வசித்து வந்தார். இவர் பேக்கரி பொருள்கள் தயாரித்து ஊர் ஊராக விற்பனை செய்துவரும் தொழில் நடத்தி வந்தார். கடந்த 6 மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கார்த்திபன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் கார்த்திபன் பணம் வாங்குவதற்காக ஈரோடு சென்று வருகிறேன் என்று வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டார். இதனையடுத்து கார்த்திபன் வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அங்கு கார்த்திபன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைதொடர்ந்து கார்த்திபனை உறவினர்கள் மீட்டு சித்தோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பிறகு கார்த்திபன் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கார்த்திபனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.