Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மங்கலம் பகுதியில் மோசஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்தி பல்லடம் பேருந்து நிலைய மார்க்கெட்டில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிரியாணி கடையில் சமீபகாலமாக வியாபாரம் சரியாக இல்லாமல் நஷ்டத்தில் நடத்தி வந்துள்ளார். இதனால் கடையில் வேலையாட்களை நிறுத்திவிட்டு அவரது தாயை கடையில் உதவியாளராக வைத்துக் கொண்டுள்ளார்.

இருப்பினும் வீட்டு செலவிற்கு போதிய வருமானம் கொடுக்க முடியவில்லை. இது குறித்து அவருக்கும் அவரது தாயாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்தி அவரது தாயை கடைக்கு அழைத்த போது அவர் வர மறுத்து நான் வேறு வேலைக்கு செல்கிறேன். மேலும் வீட்டு செலவிற்கு கூட பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கார்த்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |