Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின்கட்டணமே வசூலிக்கவேண்டும் – உயர்நீதிமன்றம்

கொரோனா ஊரடங்கு முடியும் வரை தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்னிந்திய ஸ்பின்னிங்மில் அசோசியேசன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மின் கட்டண நிர்ணயம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஊரடங்கால் மூன்று மாதங்கள் தொழிற்சாலைகள், பஞ்சாலைகளும் மூடப்பட்ட நிலையில் மின்சார வாரியம் அதிக மின் கட்டணத்தை வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது . இதனால் குறைந்தபட்ச கட்டணத்தை மட்டும் செலுத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உயரழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் ஸ்பின்னிங் மில்கள் தொழிற்சாலைகள் 70 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டார். கூடுதலாக வசூலித்து இருந்தால் வரும் காலங்களில் உள்ள மின் கட்டணத்தில் கணக்கீடு சரிசெய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். ஊரடங்கு முடியும் வரை 20 சதவீத கட்டணத்தை மட்டுமே தொழிற்சாலைகளிடம்  வசூலிக்க வேண்டும் என்று மின்சார வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |