வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை முன்னிட்டு ‘இந்தியாவை பாதுகாப்போம்’ என்ற பெயரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன் தலைமையில் நடைபெற்றது. மேலும் தொழிற்சங்கம் சார்பில் வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள மக்களை சந்தித்து துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மோகன், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ராமசாமி, இணைச்செயலாளர் முருகன், மாநில தலைவர் சுப்பிரமணியன், டி.டி.எஸ்.எப். மாவட்ட செயலாளர் சந்தானம், மாவட்ட செயலாளர் சடையப்பன் மற்றும் பேச்சாளர் நெல்லை கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.