Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இதை கைவிட வேண்டும்…. தொழிற்சங்கத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு முன்பு நாடாளுமன்ற நடப்பு கூட்ட தொடரில் மின்சார சட்ட திருத்தம் மசோதா 2021-ஐ தாக்கல் செய்ய இருப்பதை கைவிடக் கோரி மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட செயலாளர் தொ.ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார்.

அதில் பொறியாளர் சங்க திருச்சி மண்டல செயலாளரும், அனைத்து இந்திய மின்வாரிய பட்டய பொறியாளர்கள் சம்மேளன தென்மண்டல தலைவருமான சம்பத் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் காளிதாஸ், சம்மேளன திட்ட செயல் தலைவர் த.ராஜகோபால், கோட்ட செயலாளர் ஜெயபால், ஐக்கிய சங்க பிரதிநிதி முத்துமாணிக்கம் மற்றும் அனைத்து சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அந்தப் போராட்டத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராகவும், மின் வாரியம் தனியார்மயமாவதை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினர்.

Categories

Tech |