Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள்” தீவிரமாக நடைபெறும் பணி…. தொல்லியல் துறையினரின் ஆய்வு…!!

வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த கோவில்களை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மண்டலம் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க நூற்றுக்கணக்கான கோவில்கள் அமைந்துள்ளன. அதிலும் கடத்தூர் அர்ஜுனேஸ்வரர் கோவில், குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்டவை மிகவும் பிரபலமான கோவில்கள் ஆகும். ஆனால் சில கோவில்கள் மட்டும் பிரபலம் ஆகாமல், உரிய பராமரிப்பு பணி இல்லாமல் இருக்கின்றது. அந்த வகையில் குமரலிங்கம் கரிவரதராஜ பெருமாள் கோவிலானது உரிய பராமரிப்பு பணி இல்லாமல் பல ஆண்டுகளாக பூட்டிக்கிடந்துள்ளது.

இதனால் பக்தர்கள் இந்த கோவிலை பராமரிக்கவும், பாதுகாக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கோவில்களை ஆவணப்படுத்தும் திட்டத்தின் கீழ் தொல்லியல் கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி, தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா, திருப்பூர் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் பழமையான கோவில்களை நேரில் சென்று ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர். அதன்படி குமரலிங்கம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள மண்ணின் மேற்பரப்பிலும், மண்ணுக்கு உள்ளேயும் இருக்கக்கூடிய கல்வெட்டு சிற்பங்களை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் உடுமலை ஆய்வு நடுவத்தின் சார்பில் உடுமலை ஜி.வி.ஜி மகளிர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் கற்பகவல்லியும், பாரதியார் பெண்கள் நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியரான விஜயலட்சுமியும் தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போர் புத்தகங்களை வழங்கி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |